“ஜெய் ஸ்ரீராம்” கூற மறுத்த இஸ்லாமிய சிறுவன் மீது தீ வைத்து எரித்த இந்துத்துவா வெறியர்கள்!

0

17 வயது இஸ்லாமிய சிறுவனை “ஜெய் ஸ்ரீராம்” என கூறச் சொல்லி தீ வைத்த இந்துத்துவா கொலை வெறியர்கள்.

பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து வட மாநிலங்களில் இந்துத்துவா கும்பலின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இஸ்லாமியர்களை கண்டாலே ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லி கொலைவெறி தாக்குதலில் நடத்தி வருகின்றனர். அந்த தாக்குதலில் பலர் பலியாகியுமுள்ளநர்.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் சந்தாலி மாவட்டத்தில் ஜெய் ஸ்ரீராம் என சொல்லச் சொல்லி வற்புறுத்தி காலித் 17 வயதுடைய இஸ்லாமிய சிறுவனை கடத்தி, அச்சிறுவன் மீது தீ வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்துத்துவ கும்பலால் தாக்கப்பட்ட அச்சிறுவன் 60% தீக்காயங்களுடன் வாரணாசியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அச்சிறுவன், தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். அதற்கு மறுத்ததால் என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

Comments are closed.