ஜோரம் வான்: வெறுப்பிலிருந்து இஸ்லாத்தை நோக்கிய பயணம்

0

ஜோரம் வான்: வெறுப்பிலிருந்து இஸ்லாத்தை நோக்கிய பயணம்

அன்று வரை உமர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதப்படுவதை நேரடியாக கேட்டிருக்கவில்லை. ஹம்ஸா (ரலி) இஸ்லாத்தை தழுவியபோது உமர் தீர்மானித்துவிட்டார், இனி முஹம்மதை (ஸல்) சும்மா விடக்கூடாது. குறைஷிகளில் சிலர் தங்களது பாரம்பரியத்தை கைவிட்டு களம் மாறுகிறார்கள். தங்களுடைய ஒற்றுமையையும், முன்னோர்களின் நம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயங்களையும் முஹம்மது புறக்கணிக்கிறார். தங்களுடைய தெய்வங்களை ஒழிக்கப்பார்க்கிறார். -குறைஷிகளின் இந்த குற்றச்சாட்டுகள் உமரை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருந்தது.

ஒரு நாள் ஏக இறைவனின் தூதுச் செய்தியை எத்தி வைக்கும் முஹம்மதை கொன்றே தீரவேண்டும் என்ற துடிப்புடன் தனது வாளை உருவியவாறு வீட்டை விட்டு கிளம்பினார் உமர்! வழியில் சந்தித்த நுஐம் (ரலி) அவர்களிடம் முஹம்மதை கொன்றுவிட்டு கஃபாவில் உள்ள தமது தெய்வங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்கப் போகின்றேன் என்று கர்ஜித்தார். உடனே நுஐம் (ரலி) ‘‘உன் சகோதரியும் மைத்துனரும் முஸ்லிம்களாகி விட்டார்கள். அவர்கள் இந்நேரம் குர்ஆன் வசனங்களை வாசித்துக் கொண்டு கூட இருக்கலாம், அவர்களைப் போய் கவனியும்’’ என்று கூறினார்.

இந்த செய்தி உமரின் கோபத்தை அதிகரிக்கச் செய்தது. அவர் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனே தனது பயணப்பாதையை தங்கையின் வீட்டை நோக்கி திருப்பினார். கோபாவேசத்துடன் தங்கையின் வீட்டை நோக்கிச் சென்றவர் அங்கே தனது மைத்துனர் குர்ஆனின் வசனங்களை ஓதிக்கொண்டிருப்பதை கண்டார். சிறு கைகலப்பிற்கு பின் சற்று அமைதியடைந்த உமர், குர்ஆனின் வசனங்களை ஓத ஆரம்பிக்கிறார்… கல் நெஞ்சம் கரைகிறது, உள்ளம் பிரகாசிக்கிறது. உடனே சற்றும் யோசிக்காமல் ஸஃபா குன்றினை நோக்கி, அதாவது தாருல் அர்க்கம் நோக்கி, மாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்திக்க விரைந்தார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.