டிகிரி முடிக்காத ஸ்மிருதி இராணி! வேட்புமனுவில் பொய் கூறியது அம்பலம்

0

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதில், தான் இன்னும் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு ராகுலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த ஸ்மிருதி இராணி, மாநிலங்களவை வழியாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரானார்.

அவர் 2014ஆம் ஆண்டு  வேட்புமனுவில், டெல்லி பல்கலைக்கழகத்தில் 1994ஆம் ஆண்டு B.com படித்துள்ளதாக கூறியிருந்தார். அவரின் இந்த வேட்புமனுவிற்கு எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியதுடன், அவர் பட்டப்படிப்பை நிறைவு செய்யவில்லை என்றும் தெரிவித்த நிலையில், இம்முறை அவர் பட்டதாரி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த முறை தான் பட்டதாரி எனவும், இந்த முறை தான் பட்டதாரி இல்லை என ஸ்மிருதி இரானி வேட்பமனு செய்துருப்பது, அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு அவர் ஒவ்வொரு வேட்புமனுவிலும் மாறி மாறி பொய் கூறிவருவதை, அதிகரிகள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஸ்மிருதி இரானியிடம் விசாரணை நடத்தியதா? என்ற கேள்வி இருந்துக்கொண்டே தான் உள்ளது.

 

Comments are closed.