டிசம்பர் 6 எது பாரம்பரியம், எது அந்நியம்?

0

டிசம்பர் 6 எது பாரம்பரியம், எது அந்நியம்?

கால் நூற்றாண்டும் கூடுதலாக ஓராண்டும் கனவாய் ஓடிவிட்டன. அயோத்தியில் புகழ்பெற்ற, வரலாற்றுப் பதிவுகளில் இடம்பெற்ற பாபர் மசூதி, இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாசமான இராமாயணத்தின் நாயகன் பெயரால் தகர்க்கப்பட்ட இடிபாடுகள் இன்னும் நனவாய் நிற்கின்றன. அந்த டிசம்பர் 6, அதற்கு முன், அதற்குப் பின் நடந்தவை எல்லாம் நினைவாய் ஏதேதோ சொல்கின்றன.

அந்த நாள் முக்கியமாக இரண்டு மாற்றங்களை நிகழ்த்தியது. அயோத்தி நகரம் மக்களின் நல்லிணக்க அடையாளம் என்பதற்கொரு சின்னமாக இருந்த பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டு அந்த அடையாளம் அழிக்கப்பட்டது. அது வரையில், சிறு சிறு பிரச்சனைகள் ஆங்காங்கே எழுந்தாலும் மதங்களைக் கடந்த நேயத்தோடு மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்ற ஒட்டுமொத்த இந்தியத் தோற்றம் சிதைந்துபோய், மதவெறி வன்மங்களோடும் கலவரப் பதற்றங்களோடும் மக்கள் அச்சத்தின் பிடியில் வாழ்கிற தோற்றம் நிலை பெற்றிருக்கிறது.

இந்த மண்ணுக்கே உரிய பன்முகப் பண்பாட்டுப் பாரம்பரியத்தால் ஒற்றை மத ஆதிக்கவாத அரசியல் நிராகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அப்பாவித்தனமான நம்பிக்கையாகப் பொய்த்துப் போயிருக்கிறது. இந்திய அரசமைப்பு சாசனம் முன்னிலைப்படுத்துகிற உயர்தன்னாளுமை, சோசலிசம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய நான்கையுமே பலியிடத் தயங்காதவர்களின் கையில் நாட்டின் ஆட்சியதிகாரமும் பல்வேறு மாநிலங்களின் ஆட்சியதிகாரமும் சிக்கியிருக்கின்றன. இந்திய ஒன்றிய அரசின் கீழ் கிடைத்துள்ள நான்கரை ஆண்டுகால அனுபவங்களும் அந்த மாநிலங்களின் அனுபவங்களும் இனியும் இவர்களிடம் இந்த அதிகார வாய்ப்புகளை விட்டுவைத்தால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற கலக்கத்தைத் தருகின்றன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Leave A Reply