டிஜிட்டல் இந்தியா செயலி மூலம் ஹாக் செய்யப்பட்ட ஆதார் தகவல்கள்

0

பல தரப்பில் இருந்து ஆதார் தகவல்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போது ஆதார் தாவல்கள் முற்றிலுமாக பாதுகாப்பானது என்று UIDAI தரப்பில் கூறப்பட்டது. தற்போது கராக்பூர் IIT மாணவர் ஒருவர் டிஜிட்டல் இந்தியா செயலி மூலம் ஆதார் தகவல்களை ஹாக் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

காராக்பூர் IIT மாணவரும் “Qarth Technoloies” என்ற நிறுவனத்திற்கு சொந்தக்காராருமான 31 வயது அபினவ் ஸ்ரீவஸ்தவா என்பவர் தனது “eKYC Verification” என்கிற ஆண்டுராய்டு செயலிக்கு மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா செயலியின் கீழ் இயங்கும் e-Hospital  அமைப்பு மூலம் அதன் சர்வரில் இருந்து ஆதார் தகவல்களை UIDAI அனுமதி பெறாமல் எடுத்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. இந்தத் தகவல்களை வைத்து அவர் UIDAI தகவல்களை தனது செயலி மூலம் சரி பார்ப்பதற்காக மக்களுக்கு வழங்குகிறார் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இவர் தனது செயலி மூலம் பெற்ற ஆதார் தகவல்களில் ஒருவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், உள்ளிட்ட பல தகவல்களை பெற்றுள்ளார். மேலும் இந்த செயலியில் விளம்பரம் மூலமாக அவர் சுமார் 40000 ரூபாய் வரை சம்பாதித்ததாகவும் பெங்களூரு காவல்துறை ஆணையர் T.சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் இதனை தனி ஒரு நபராக செயதாரா அல்லது இவருக்கு யாரேனும் உதவிகள் புரிந்தனரா என்றும் காவல்துறை விசாரித்து வருவதாக தெரிகிறது. இவரது “Qarth Technoloies” நிறுவனத்தை பிரபல டாக்சி நிறுவனமான ஓலா நிர்வாணம் வாங்கியுள்ள நிலையில் இவர் தனது செயலி மூலம் பெற்ற தகவல்களை இவரிடம் இருந்து ஓலா நிறுவனம் பெற்று பயன்படுத்தியதா என்றும் விசாரணை நடத்தப்படுகிறது. இவர் ஓலா நிறுவனத்தில் 40 லட்ச ரூபாய் வருட சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இயங்கி வந்த இவரது இந்த செயலி அரசிற்கு தெரியாமல் UIDAI அனுமதி பெறாமல் ஆதார் தகவல்களை பெறுகிறது என்பது ஏழு மாதங்கள் கழிந்த பின்னரே அரசிற்கு தெரியவந்துள்ளது ஆச்சர்யமளிக்கிறது. ஒரு தனிநபர் இத்தகைய தகவல்களை அரசிற்கு தெரியாமல் எடுக்க முடியும் என்றால் அரசு உதவியுடன் இயங்கும் பன்னாட்டு சைபர் படைகளுக்கு இது எத்தகைய சாவாலாக இருக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் அவசியம் என்ற நிலைக்கு அரசால் மக்கள் தள்ளப்பட்டு வரும் இந்த வேலையில் இது போன்ற நிகழ்வுகள் இத்தகைய அமைப்பிற்கு நாம் இன்னும் தொழில்நுட்ப அளவில் தாயாராகவில்லை என்பதையே காட்டுகிறது. முன்னதாக ஆதார் அமைப்பு பாதுகாப்பாக இல்லை என்று கூறி அதற்கு செய்முறை விளக்கம் கொடுத்ததற்காக ஒருவர் மீது UIDAI வழக்கு தொடர்ந்து செய்திகள் வெளியானது இங்கு கவனிக்கத்தக்கது. (பார்க்க செய்தி)

Comments are closed.