டிரம்ப்பின் முஸ்லிம்கள் மீதான தடையை அமல் படுத்த(பகுதி) அமெர்க்க உச்சநீதிமன்றம் அனுமதி

0

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றபின் உலகின் ஆறு நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வருகை தருவதற்கும் அனைத்து அகதிகளும் அமெரிக்கும் வருவதற்கும் தடை வித்தித்து சட்டம் பிறப்பித்தார்

தேசிய பாதுகாப்பு என்கிற பெயரில் இயற்றப்பட்ட இவரின் இந்த சட்டம் பெறுவாரியான எதிர்ப்பலைகளை அமெரிக்காவில் ஏற்படுத்தியது. இதற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டு இந்த சட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது.

தற்போது முஸ்லிம்கள் மீதான தடை சட்டத்தின் சில பகுதிகளை அமல் படுத்த அமெரிக்கக் உச்ச நீதிமன்றம் டிரம்ப் அரசிற்கு அனுமதி வழங்கியுள்ளது. டிரம்ப்பின் சட்டமானது ஈரான், லிபியா, சோமாலியா, சூடான்,சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும் அணைத்து நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு 120 நாள் தடையும் விதித்திருந்தது.

தற்போது இந்த சட்டத்தில் ஒரு பகுதியை அமல் படுத்த அனுமதியளித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்க வருபவர்கள் எந்த ஒரு அமெரிக்கருடனோ அல்லது அமெரிக்கக் நிறுவனத்துடனோ முறையான அதிகாரப்பூர்வ தொடர்பு இல்லாதவராக இருந்தால் அவருக்கு விசா மறுக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரைனையை வருகிற அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் மேற்கொள்ளும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் மேற் குறிப்பிடப்பட்ட நாடுகளில் இருந்து இதுவரை அமெரிக்க சென்றிராதவர்கள் அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுடன் தங்களுக்கு அதிகாரப்பூர்வ தொடர்பு இல்லை என்றால் அவர்களுக்கு விசா மறுக்கப்படும்.

அமெரிக்கக் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெளியானதும் American Civil Liberties Union(ACLU) அமைப்பு தங்களின் ட்விட்டர் பக்கத்தில், “வருகிற அக்டோபர் மாதம் டிரம்ப்பின் இந்த முஸ்லிம் தடைக்கு எதிராக போராட மீண்டும் நீதிமன்ற படி ஏறுவோம்” என்று கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ACLU வின் அகதிகள் உரிமை திட்டத்தின் இயக்குனர் ஓமர் ஜவாத், இந்த தடை அடிப்படை அரசியல் சாசன கொள்கையான, “எந்த ஒரு மதத்திற்கும் அரசு சாதகமாகவோ பாதகமாகவோ இருக்ககூடாது”, என்பதை மீறியுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இந்த சட்டத்தை நீதிமன்றங்கள் பல முறை தடை செய்துள்ளன. இதனை முழுமையாக தடை செய்ய உச்ச நீதிமன்றத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது அதிருப்தியினை வெளிப்படுத்தி இருந்தாலும் டிரம்ப் தரப்பு இதனை வரவேற்றுள்ளது.

இது குறித்து டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்றைய உச்சநீதிமன்றத்தின் ஒருமனதான முடிவு நம் நாட்டை பாதுகாக்க முக்கியமான கருவியை பயன்படுத்த தேசிய பாதுகாப்பிற்கு கிடைத்த தெளிவான வெற்றி” என்று கூறியுள்ளார்.

Comments are closed.