டிரம்ப் ஆபத்தானவர்: ஐ.நா. மனித உரிமை அமைப்பின் தலைவர்

0

ஐ.நா. வின் மனித உரிமை அமைப்பின் தலைவரான ஜெயித் ரா’ஆத் அல் ஹுசைன் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் “அது சர்வதேச பார்வையில் மிகவும் ஆபத்தானது” என்று கூறியுள்ளார்.

ஜோர்டான் நாட்டு இளவரசரான இவர் டிரம்பின் கருத்துக்கள் குழப்பமானதாகவும் கலக்கத்தை ஏற்ப்படுத்துவதாகவும் உள்ளது என்று கூறியுள்ளார். “டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இதுவரை அவர் தெரிவித்துள்ள கருத்துக்களின்படி அவற்றை அவர் மாற்றாத வரையில், அது சர்வதேச பார்வையில் மிகவும் ஆபத்தானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் டொனால்ட் டிரம்ப் போன்ற அரசியல்வாதிகள் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கடைபிடிக்கும் அதே யுக்திகளை கையாள்கின்றனர் என்று அவர் தெரிவித்திருந்தார்.

Comments are closed.