டில்லியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மியான்மர் அகதி

0

மியன்மாரில் இருந்து அகதியாக டில்லி வந்துள்ள 23 வயது கர்பிணி பெண் ஒருவரை மூன்று சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். மேலும் அப்பெண்ணை அவரது தலையில் செங்கற்களால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தாப்ரி காவல்நிலையத்திற்கு 200 மீட்டர் தொலைவில் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் தங்களது வீட்டிற்கு செல்லும் வழியில் நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ளது.

இது குறித்து காவல்துறை துணை கமிஷனர் சுரேந்திர குமார் கூறுகையில், “குற்றவாளிகள் மூவரும் ஸ்கூட்டியில் செல்லும் போது சம்பந்தப்பட்ட தம்பதிகள் நடந்து செல்வதை கவனித்துள்ளனர். மூவரில் ஒருவன் அப்பெண்ணை தகாத முறையில் தொட்டு அருவருப்பான வாரத்தைகளை கூறியுள்ளான். இதை அத்தம்பதிகள் எதிர்க்கவே மற்றொருவன் செங்கற்களை அப்பெண்ணை தலையில் வீசியுள்ளான். இதனை அடுத்து அப்பெண்ணின் கணவர் அவர்களை துரத்த மூவரும் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். ஆனால் அவர் அவர்களை துரத்துச் சென்று ஒருவனை பிடித்துள்ளார்.” என்று கூறியுள்ளார். மற்ற இவர்களையும் பின்னர் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தீன தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பெண்ணிற்கு நான்கு தையல் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று சிறுவர்கள் மீது இந்திய குற்றப்பிரிவு 354, 308, மற்றும் 34 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவரையும் சிறுவர் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் புரிந்த குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு 16 ம்\அற்றும் 17 வயதான இருவரை பெரியவர்கள் என்று கருத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. என்று துணை கமிஷனர் கூறியுள்ளார்.

Comments are closed.