டில்லி ஆக்சிஸ் வங்கியில் 44 போலி கணக்குகளில் 100 கோடி ரூபாய்

0

மத்திய டில்லியின் சாந்தினி சவுக் புகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளையில் வருமான வரித்துரையினர் நடத்திய சோதனையில் 44 போலி வங்கிக் கணக்குகளில் சுமார் 100 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 8 ஆம் தேதிக்கு பின்னர் இது நடந்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கிளையில் நவம்பர் 8 ஆம் தேதியில் இருந்து மொத்தமாக 450 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த 44 கணக்குகளும் போலி ஆவணங்களை வைத்து தொடங்கப்பட்டுள்ளது என்றும் அதில் செலுத்தப்பட்ட பணம் தங்கம் வாங்க பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆக்சிஸ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், தங்கள் வங்கி மிக உயர்ந்த தரங்களைக் கொண்டு செயல்படுவதாகவும் அதில் இருந்து எந்த ஒரு பணியாளரையும் விலகிச் செல்ல அனுமதிப்பதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அப்படி விலகிச்செல்லும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து விசாரணை நடத்தும் புலனைவுதுரையினர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஸ் வங்கி கிளைகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் இது இரண்டாவது சோதனையாகும். கடந்த மாதம் ஆக்சிஸ் வங்கியின் கஷ்மிர் கேட் கிளையில் இருந்து 3.5 கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளுடன் இருவரை காவல்துறையினர் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.