டில்லி பல்கலைகழக ABVP தலைவர் மீது வரதட்சணை வழக்கு

0

டில்லி பல்கலைகழக மாணவர் அமைப்பு தலைவரும் ABVP அமைப்பை சேர்ந்தவருமான சதிந்தர் அவானா மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சதிந்தர் அவானா மற்றும் அவரது தந்தை உட்பட அவானா குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மீது மோஹித் அவானாவின் மனைவி காவல்துறையில் புகாரளித்துள்ளார். அவானா குடும்பதிற்கு தங்கள் குடும்பம் உயர் ரக சொகுசு கார் கொடுக்கவில்லை என்பதனால் தன்னை அவர்கள் தாக்கியதாகவும்  கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் காவல்துறையில் புகாரளித்துள்ளர்.

2015 இல் மோஹித் அவானவை திருமணம் செய்து கொண்ட அருணா பாத்தி என்பவர் காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில், தங்கள் திருமணத்தின் போது வரதட்சணையாக மணமகன் வீட்டாருக்கு ஆடி கார் வழங்கப்பட்டது என்றும் ஆனால் அவர்கள் தற்போது ஜாகுவார் கார் தான் வேண்டும் என்றும் கூறுவதாகவும், வரதட்சணைக்காக தன்னை அவர்கள் அடித்து துன்புறுத்துவதாகவும் கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் புகாரளித்துள்ளர். மேலும் அவானா குடும்பத்து ஆண்கள் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் இது குறித்து தனது வீட்டில் தெரிவித்ததும் அவர்கள் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் காவல்துறையில் அவர் புகாரளித்துள்ளர்.

அருணாவிற்கும் மோஹித்திற்கும் திருமணமாகிய சில நாட்களிலேயே தனது வீட்டிற்கு திரும்பிய அருணா தந்து பெற்றோர்களிடம் மோஹித் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். தங்கள் குடும்பம் ஏற்கனவே வரதட்சணையாக நகைகள், ரொக்கப்பணம் மற்றும் சொகுசு கார்களை கொடுத்தாலும் கூட மீண்டும் மீண்டும் வரதட்சனை கேட்டு அவர் துன்புறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில் மோஹித் அவானா மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் வரதட்சணை கேட்டு அருணாவை துன்புறுத்தியதாகவும் அவரை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. அருணாவின் சகோதரர் அருணாவை காப்பாற்ற வந்த போது மோஹித் 50-60 பேர்களை அழைத்து அருணாவையும் அவரது சகோதரரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சதிந்தர் அவானா, தனக்கும் தனது குடும்பத்திற்கும் இதில் எந்த சம்பந்தமும் இல்லை எண்டுறம் தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது என்றும் இது தனது பெயரை கெடுக்க ஏற்ப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் சூழ்ச்சி என்றும் கூறியுள்ளார். இன்னும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோஹித் அவாநா தனது உறவினரே அல்ல என்று அவர் கூறியுள்ளார். இதனை தற்போது நொய்டா காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Comments are closed.