டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன்

0

டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் ஸ்னிக்தா சர்வாரியா கடந்த செவ்வாய் கிழமை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் ஜூலை 30 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளார். கெஜ்ரிவால் தனது தேர்தல் உறுதி பத்திரத்தில் தவறான தகவல்களை கொடுத்ததற்காக இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2013 டில்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவால் சமர்ப்பித்த தேர்தல் உறுதி பத்திரத்தில் தன்னுடைய கவ்சம்பி பகுதியில் உள்ள சொத்தின் சந்தை மதிப்பை மறைத்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு சாரா அமைப்பான மவ்லிக் பாரத் டிரஸ்ட்  வழக்கறிஞர் நீரஜ் சக்சேனா இந்த வழக்கை தொடுத்துள்ளார். இதில் தேர்தலின் போது கெஜ்ரிவால் தன்னை ஒரு டில்லிவாசியாக காண்பித்துள்ளார் என்றும் ஆனால் உத்திர பிரதேசத்தின் கவ்சம்பி பகுதிதான் அவரது ஊர் என்றும் கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் கெஜ்ரிவால் மீது குற்றம் சுமத்த போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளதாகவும் இவரது இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்திய தண்டனை சட்டத்தின்படி இரண்டு வருடங்கள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

Comments are closed.