டீவி சீரியல் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பாஜக

0

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் விருவிருப்பாக நடைபெற்று வரும் நிலையில், அனைத்து கட்சிகளை விட  பாஜக ஒரு படி மேலேதான் செல்கிறது. திரைப்படம், நமோ டிவியை தொடர்ந்து தற்போது சீரியல். டிவி சீரியல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மூலமாக அக்கட்சி மறைமுக பரப்புரை மேற்கொள்வதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஜீ தொலைக்காட்சியின் ஒளிபரப்பப்படும் பிரபல ஹிந்தி சீரியல்களில் மோடியின் திட்டத்தை பற்றியும், தூய்மை இந்தியா திட்டத்தை பற்றியும் பேசி வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் இத்தனை கோடி மக்கள் பலனடைந்தனர் என்றும், இனியும் மக்கள் பொதுவெளியில் மலம் கழிக்கும் அவல நிலை இல்லை என்றும் கூறி வருகின்றனர். ஆனால் மிகவும் கவனமாக இது மறைமுகமாக செய்யப்படுகிறது. ஒரு முறை கூட மோடியின் பெயர் உச்சரிக்கப்படவில்லை. பொதுவாகவே டிவி சீரியல்களை பெண்களே அதிக அளவில் பார்ப்பார்கள். அதில் பிரச்சாரம் செய்வதன் மூலம் பாதி அளவு பெண் வாக்காளர்களை குறிவைத்து பாஜக செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Comments are closed.