டீ கப், ரயில் டிக்கெட்களில் மோடி படம்! தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

0

கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. அதில் 7 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு செய்த அடுத்தடுத்து தேர்தல் நடைமுறையும் அமலுக்கு வந்துவிட்டது.

தற்போது மத்திய பாஜக அரசு, அரசு துறைகளில் நரேந்திர மோடி படங்களை பயன்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையங்களில் உள்ள  டீ கடைகளில் விற்கப்படும் டீ கப்களில் ”நான் காவலாளி ” என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் டிக்கட்டுகளில் மோடி படம் அச்சடிக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. அதைபோலவே விமான போக்குவரத்துகளிலும் மோடி படம் உபயோகித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

இதனால் அந்தந்த துறைகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மோடி படம் அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுக்கள் வழங்கப்படுவது குறித்து உடனடியாக பதிலளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.