டெல்லியில் பெண் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கி சூடு!

0

டெல்லியில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை முகமூடி அணுந்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டனர்.

நொய்டா பகுதியில் வசித்து வரும் மிதாலி சந்தோலா என்ற பத்திரிக்கையாளர் ஞாயிற்றுகிழமை 12:30AM மணியளவில் ஹூண்டாய் i20 கார்-ஐ ஓட்டிவந்துள்ளார். அப்போது தீடீரென்று முகமூடி அணிந்த மர்ம கும்பல் அவரது காரின், முன் கண்ணாடி மீது முட்டையடித்து விட்டு, துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த பத்திரிக்கையாளரை தர்மசீலா மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இரவில் வாகன ஓட்டிகளிடமிருந்து கொள்ளையடிக்கும் கும்பலா, இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்று விசாரணை நடத்தி வருகிறது.

Comments are closed.