டெல்லியில் நடைபெற்ற CAAக்கு எதிரான அறவழி போராட்டத்தை வன்முறையாக்கியது பாஜகவின் ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
இந்த வன்முறையில் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்கள். அவர்கள் வீடுகள் தகர்க்கப்பட்டது. வன்முறையில் இந்துத்வா நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்ச்.
அதுபோல மேகாலயாவில் CAA எதிர்பாளர்களை ஆதரவாளவர்களான பாஜக–இந்துத்துவாவினர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 சிஏஏ எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வன்முறை பகுதியில் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆயுதம் தாங்கிய போலிஸார் ரோந்து சுற்றி வருகிறார்கள். இந்த வன்முறை சம்பவம் பரவாமல் இருக்க மாநில நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஷில்லாங் உள்பட 6 மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் 48 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
செல்போன் சேவை மற்றும் இன்டர்நெட் சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இந்த வன்முறை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.