டெல்லி: எகிப்து தூதரம் நோக்கி கண்டன பேரணி

0

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது முர்ஸி உள்ளிட்டோரக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில பிரிவு எகிப்து தூதரகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. மே 19 அன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் எகிப்தில் விதிக்கப்படும் கூட்டு மரண தண்டனைகளுக்கு எதிரான தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில தலைவர் பர்வேஸ் அகமது கண்டன உரை நிகழ்த்தினார். ‘ஜனநாயகம் என்பது ஒவ்வொரு மனிதன் மற்றும் சமூகத்தின் அடிப்படை உரிமை. எகிப்தில் ஜனநாயக சக்திகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் நிகழ்வானது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் உள்ள நம்மை கவலை கொள்ளச் செய்கிறது. அரபுலக வசந்தம் அப்பகுதியில் ஜனநாயகம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. முர்ஸியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள இராணுவ அரசாங்கம் கூட்டு மரண தண்டனைகளை விதித்து வருகிறது’ என்று தன்னுடைய உரையில் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் திட்டமிடலின் மூலம் முர்ஸியின் ஆட்சி கவிழ்க்கப்ட்டதாக உரையாற்றியவர்கள் குற்றம் சுமத்தினர். கண்டன பேரணியை தூதரகத்திற்கு சற்று முன்னரே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். முர்ஸி மற்றும் யூசுஃப் அல் கர்ளாவி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளள மரண தண்டனை நீதியை கேலிக்குரியதாக ஆக்கும் செயல் என்றும் ஜனநாயத்தை மரண குழிக்கு தள்ளும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் தூதரக அதிகாரிகளிடம் தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.

Comments are closed.