‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்

0

டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளால் CAA போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15க்கும் மேற்படோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறைக்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி கலவரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளதாவது:

 பாஜக- ஆர்.எஸ்.எஸ், மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக மக்களவை உறுப்பினர்களும் சிறுபான்மையினர்களுக்கு எதிராக நடத்தி வரும் வெறுப்புகள், பகைமைப் பிரச்சாரத்தின் விளைவாகவும், CAA-NRC-NPR போன்ற மக்களை பிளவுபடுத்தும் பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளும் விலைமதிக்க முடியாமல் மனித உயிர்களை பலிவாங்கியுள்ளது.

ஜனநாயக உரிமைகளுக்காக வடகிழக்கு டெல்லியில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் மீது நேற்று சங்பரிவார் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தி கலவரத்தை உருவாக்கியுள்ளது.

இந்த கொடுங்குற்ற செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறதுஎன முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.