டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்

0

டெல்லியில் வன்முறையால் வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் திரும்பவேண்டும் என்றும், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும்  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மதவாத சட்டமான சிஏஏவை மத்திய பாஜக ராஷ் திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராடியவர்கள் மீது ஆர்எஸ்எஸ்-பாஜக மதவெறிக்கும்பல்கள் தாக்குதல் நடத்தி, வன்முறையில் ஈடுபட்டனர். இதில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர்  கொலை செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான மக்கள் தங்களது வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கின்றனர்.  

இதனிடையே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நிலைமை கட்டுக்குள் உள் ளது. வேறு எங்கும் கலவரம் நடந்ததாக பதிவுகள் இல்லை. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி மேற்கொள்ளப்படும்.  கலவரத்தைத் தொடர்ந்து டெல்லியின் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீவத்ஸவா, எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் வராமல்  தடுக்கவும், நல்லிணக்கத்தை மீட்டெடுக்கவும், ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்” அரவிந்த் கெஜ்ரிவால்.

Comments are closed.