டெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்

0

வன்முறையாக மாறிய டெல்லியின் நிலைமை கவலை அளிப்பதாகவும், இதனை ஐக்கிய நாடுகள் கவனிப்பதாகவும் ஐ.நா-வின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

டெல்லி வன்முறையின்போது, போலீசார் வேடிக்கை பார்த்து நின்றது, மிகவும் கவலை அளிக்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையரான மிச்செல் பேச்லட்டும் கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 43வது ஆலோசனை கூட்டம் சுவிட்சர்லாந் தில் உள்ள ஜெனீவாவில் நடைபெற்றது. இந்த கூட் டத்தில் கலந்துகொண்ட மிச்செல் பேச்லட் கூறியுள்ளதாவது:

“இந்தியாவில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் உருவான டெல்லி வன்முறையில் போலீஸ் செயல்படாமல் இருந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த சட்டம் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பெரும்பாலான இந்தியர்கள், அமைதியான முறையிலேயே தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில் டெல்லி வன்முறையின் போது, இஸ்லாமியர்களுக்கு எதிராக சில பிரிவினர் தாக்குதல் நடத்தியபோது காவல்துறையினர் செயலற்று நின்றிருக்கிறார்கள். மேலும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசாரே ஏவி விடப்பட்டுள்ளனர்.”

இவ்வாறு பேச்லட் கூறியுள்ளார்.

Comments are closed.