டெஹ்ராடுன் போலி என்கெளண்டர் வழக்கு: 7 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை, 11 பேர் வழக்கில் இருந்து விடுவிப்பு

0

2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி, வேலை தேடி டெஹ்ராடுன் சென்ற 20 வயது MBA மாணவரான ரன்பீர் சிங் என்பவரை போலி என்கெளண்டரில் சுட்டுக் கொலை செய்த வழக்கில் ஏழு காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் 11 காவலர்களை வழக்கில் இருந்து விடுவித்தும் டில்லி உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரனை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து 18 காவலர்களும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி S.முரளீதர் மற்றும் நீதிபதி I.S.மேத்தா அடங்கிய இரண்டு நீதிபதி பெஞ்ச் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

இவ்வழக்கின் குற்றவாளிகள் காவல்துறை ஆய்வாளர் சந்தோஷ் ஜெய்ஸ்வால் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் கோபால் தத் பட், ராஜேஷ் பிஷ்த், நீரஜ் குமார், நிதின் செளஹான் அம்ற்றும் சந்திர மோகன் மற்றும் காவலர் அஜீத் சிங் ஆகியோர், கொலை மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், காவலர்கள் சட்பிர் சிங், சுனில் சைனி, சந்தர் பால், சவ்ராப் நவ்டியால், நாகேந்திர நாத், விகாஸ் சந்திரா பலுனி, சஞ்சய் ராவத், மோகன் சிங் ரானா, இந்தர் பான் சிங், ஜஸ்பால் சிங் கோசியான் மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் ஆவர்.

நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக வழங்கிய அறிவிப்பில், “உத்திராகன்ட் காவல்துறையால் 20 வயது இளைஞர் பரிதாபமாக போலி என்கெளண்டர் ஒன்றில் கொல்லப்பட்ட வழக்கு இது. போலி என்கெளண்டர் என்பது சட்டத்தில் எங்குமே இடமில்லாத சட்டத்திற்கு புறம்பான கொலையாகும். காவல்துறை உட்பட ஆயுதம் தாங்கிய படைகள் தங்களது குற்றங்களுக்கு தண்டனையில்லாமல் தப்புவதன் வெளிப்பாடு, அவர்கள் சட்டத்திற்கு எவ்வித மதிப்பும் அளிக்காமல் நடப்பது.” என்று கூறியுள்ளது.

Comments are closed.