டைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு

0

டைம்ஸ் நவ் மீது NWF தலைவர் சைனாபா தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: டைம்ஸ் நவ் ராகுல் சிவசங்கர், ஆனத் நரசிம்மனுக்கு மலப்புரம் நீதிமன்றம் சம்மன்

ஹாதியா வழக்கு தொடர்பாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்றில் NWF தலைவர் சைனாபாவை தவறாக சித்தரித்து செய்திகள் வெளியிட்டது. “கேரளாவில் இந்து பெண்கள் வேட்டையாடப்பட்டு மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்என்று தலைப்பிட்ட அந்த செய்தித் தொகுப்பில் தன்னை உண்மையற்ற செய்திகளுடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்ட காரணத்தால் டைம்ஸ் நவ் நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் சிவ்சங்கர் மற்றும் ஆனந்த் நரசிம்மன் ஆகியோர் மீது சைனாபா மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது புகாரில், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் இந்த செய்தித் தொகுப்பில் இந்திய முஸ்லீம்களை கொச்சைப்படுத்தும் விதமாக சங்க்பரிவார்களால் அறிமுகப்படுத்தப்பட்ட லவ் ஜிஹாத் சொல்லாடலுடன் தன்னை தொடர்புபடுத்தி செய்து வெளியிடப்பட்டுள்ளது என்றும் 30-08-2017 அன்று தனது புகைப்படத்துடன் ஒளிபரப்பட்ட அந்த செய்தி தொகுப்பு உலகெங்கிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது நலம் விரும்பிகள் பலர் தன்னை தொடர்பு கொண்டு அந்த நிகழ்ச்சி மீதான தங்களது அதிருப்தியை தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியினால் சமூகத்தில் தனக்கிருந்த நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

ஹாதியா வழக்கில், ஹாதியா தனது பெற்றோருடன் தனக்கு செல்ல விருப்பமில்லை என்று நீதிமன்றத்தில் முறையிட்ட போது சைனாபாவை ஹாதியாவின் பாதுகாவலராக நீதிமன்றம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.