டொனால்ட் டிரம்பின் இங்கிலாந்து வருகையை ரத்து செய்யக் கோரிய மனுவில் ஒரு மில்லியன் கையெழுத்துக்கள்

0

அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்ட் டிரம்பின் இங்கிலாந்து வருகையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரிட்டன் பாராளுமன்ற இணையதளத்தில் ஒரு மில்லியன் பேர் கையெழுத்து இட்ட மனு அளிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் நுழைய டிரம்ப் தடை விதித்ததை தொடர்ந்து நடைபெற்றுள்ளது.

இந்த மனுவில், “டொனால்ட் டிரம்ப் பிரிட்டனுக்குள் அமெரிக்க அரசின் தலைவராக வரலாம் ஆனால் அவரின் வருகைக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கக் கூடாது ஏனென்றால் அது ராணிக்கு சங்கடமளிக்கும் என்று கூறியுள்ளனர்.

மேலும் “நன்கு ஆவணப்படுத்தப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் பெண்கள் மீதான வெறுப்பு மற்றும் அநாகரீக பேச்சு ஆகியவை அவர் ராணியால் அல்லது வேல்ஸின் இளவரசரால் வரவேர்க்கப்படுவதை விட்டு அவரை தகுதி இழக்கச் செய்கிறது,.” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பிரிட்டனின் மரபுப்படி பிரத்தானிய குடிமக்கள் 1,00,000 பேர் கையெழுத்திட்ட எந்த ஒரு மனுவும் அந்நாட்டு பாராளுமன்றத்தால் பரிசீளிக்கப்பட வேண்டும்.

கடந்த ஜனவரியில் டிரம்ப்பை பிரிட்டனை விட்டு தடை செய்ய உருவாக்கப்பட்ட மனுவில் ஏறத்தாழ 6,00,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இது தான் பிரதமரானால் அமெரிக்காவிற்குள் முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்குவதை வெகுவாக குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியதன் விளைவாக ஏற்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை , டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் அனைத்து அகதிகள் வருவதை 120 நாட்களுக்கு தடை செய்தும், சிறிய அகதிகள் வருவதற்கு நிரந்தர தடையும், ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் நாட்டு குடிமக்கள் வருவதற்கு 90 நாட்கள் தடையும் விதித்து உத்தரவிட்டார்.

Comments are closed.