ட்ரம்ப்பின் முஸ்லிம்கள் மீதான தடை: முதல் வழக்கு பதிந்த ஹவாய்

0

அமெரிக்க பிரதமர் டொனால்ட் டிரம்ப்பின் முஸ்லிம் விரோத கொள்கைக்களுக்கு எதிராக முதல் முறையாக அமெரிக்க மாநிலமான ஹாவாய் கடந்த புதன் கிழமை (மார்ச் 8 ) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஹவாய் மாநிலத்தின் வழக்கறிஞர்கள் முஸ்லிம்கள் மீதான இந்த பயணத்தடையை தற்காலிகமாக தடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். ட்ரம்ப்பின் தற்போதைய புதிய தடை குறித்து கருத்து தெரிவித்த ஹவாய் அட்டார்னி ஜெனெரல் டோக் சின், ஜனவரி மாதம் ட்ரம்ப் அறிமுகப்படுத்திய முஸ்லிம்கள் மீதான் தடையை ஒப்பிடும்போது இந்த புதிய சட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தேசிய பாதுகாப்பு என்கிற பெயரில் இந்த சட்டம் அமெரிக்காவில் குடியேருபவர்களையும் அடைக்கலம் தேடுபவர்களையும் குறிவைக்கின்றது என்று கூறியுள்ளார். மேலும் இன்னும் அதிகப்படியான கட்டுப்பாடுகளுக்கு இது வழிவகுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது ட்ரம்ப் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரில் அவர்  முஸ்லிம்களை நாட்டிற்கு விட மாட்டேன் என்றும் நாட்டை விட்டு விரட்டுவேன் என்று கூறிய 11  தருணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய இந்த தடையினால் தங்களது பல்கலைகழகங்கள் பாதிக்கப்படும் என்றும் ஹவாயில் உள்ள பல்கலைகழகங்களுக்கு மாணவர்களையும் ஆசிரியர்களையும் எடுப்பதில் பிரச்சனை ஏற்ப்படும் என்றும் ஹவாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இந்த தடையினால் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்படும் என்றும் அதனால்  ஹவாயின் பொருளாதாரம் பாதிப்பிற்குள்ளாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய தடை ஹவாயின் நெறிமுறைகளுக்கு  முரணானது என்றும் இது பியர்ல் துறைமுக தாக்குதலுக்கு பின் சீன ஜப்பானியர்கள் மீதான தடையை தங்களுக்கு நினைவூட்டுகிறது என்றும் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புதிய தடை கையெழுத்திடப்பட்டதும் இந்த தடை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது தானா என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்படும் என்று Arab American Civil Rights League அமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் மீதான இந்த தடைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவது என்பது இந்த சட்டத்தை இல்லமால் செய்வதால் மட்டுமே முடியும். ஆனால் தான் முன்னதாக கொண்டுவந்த சட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்கிறேன் என்று மீண்டும் மதவாரியாக மக்களை பிளவு படுத்தியுள்ளார் ட்ரம்ப் என்று American Civil Liberties Union தெரிவித்துள்ளது.

இந்த வழக்குகள் குறித்த விசாரணை மார்ச் மாதம் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது ட்ரம்ப்பின் முஸ்லிம்கள் மீதான புதிய பயண தடைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முந்தைய நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.