தகவல் திருடன் பேடிஎம்

0

தகவல் திருடன் பேடிஎம்

2016, நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவோடு இரவாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மோடி அரசு செல்லாததாக அறிவித்தது. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியாகவும் அதனை தொடர்ந்த நாட்களில் பெரும் துன்பத்தையும் ஏற்படுத்தினாலும் சில கார்பரேட்கள் மற்றும் பெருமுதலாளிகளுக்கு மட்டும் இது பெரும் லாபங்களை அள்ளித்தரும் சந்தர்ப்பமாக அமைந்தது என்றுதான் கூற வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மக்கள் பணத்திற்காக வீதிகளில் அலைந்து கொண்டிருக்க, ‘ATM ஐ விடுங்கள்PayTmற்கு வாருங்கள்’ என்று பிரபல நாளிதழ்களில் மோடியின் படத்துடன் முதல் பக்க விளம்பரங்களை அளித்தது பேடிஎம்நிறுவனம்.

தங்களிடம் பணம் இல்லையென்று வங்கிகளும் ஏடிஎம்-களும் கைவிரித்துவிட மக்கள் தங்கள் அன்றாட செலவிற்கு பணமின்றி திண்டாடிய நிலையில் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறுங்கள் என்றது பேடிஎம். பணமில்லாமல் தவித்த மக்களும் வியாபார நிறுவனங்களும் வேறு வழியின்றி பேடிஎம்-யை பயன்படுத்த தொடங்கினார்கள். காலப்போக்கில் பேடிஎம் என்ற சொல் மக்களிடம் பிரபலமானது. இதனால்தான் சாதாரண டீ கடைகளில் கூட ‘இங்கு பேடிஎம் ஏற்றுக் கொள்ளப்படும்’ என்ற விளம்பரத்தை நம்மால் காண முடிந்தது. விளைவு 2016 நவம்பர் மாத இறுதிக்குள்ளே நாள் ஒன்றிற்கு சுமார் 120 கோடி ரூபாய்களை பெற்றது பேடிஎம்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்து ஏழு மாதங்கள் ஆகியும் அந்த நடவடிக்கையின் தாக்கத்தில் இருந்து மக்கள் மீளாத நிலையில், பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மாவோ தில்லியின் மிக சொகுசுப் பகுதியாக கருதப்படும் கோல்ஃப் லிங்க் பகுதியில் 82 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கினார். 2016ல் சர்மாவின் சொத்து மதிப்பு 162% உயர்வடைந்தது. இந்தியாவின் 40 வயதிற்கு கீழான பணக்காரர்களில் முதல் இடத்தையும் அவர் பிடித்தார். தற்போது, பணபரிவர்த்தனை போல பேடிஎம் பரிவர்த்தனையும் சாதாரணமாகிவிட்ட நிலையில் பிரபல புலனாய்வு இணையதளமான கோப்ரா போஸ்ட், பேடிஎம் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்


Comments are closed.