தங்களது தோல்விகளை மறைக்க தேசியவாத அச்சுறுத்தலை எழுப்புகிறது பா.ஜ.க: மனிஷ் திவாரி

0

பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சரான வெங்கையா நாய்டு, மோடி இந்தியாவிற்கு கடவுள் கொடுத்த பரிசு என்று கூறியிருந்தார். இதனை கேலி செய்திருந்த காங்கிரஸ், மோடி இந்தியாவிற்கு கடவுள் கொடுத்த பரிசா இல்லை தன்னல குழு அளித்த பரிசா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் தங்களது தோல்விகளை மறைக்க தேசியவாத அச்சுரத்தலை எழுப்புகிறது என்று கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், பா.ஜ.க மறுபடியும் போலியாக தேசியவாத விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்த தேசியவாத அச்சுறுத்தலை அவர்கள் தற்பொழுது எழுப்புவதற்கு ஒரே காரணம் அவர்களுடைய கடந்த 22 மாத தோல்வியை மறைப்பதற்குத்தான் என்று கூறியுள்ளார்.

தங்கள் ஆட்சியின் 22 மாதங்களை பா.ஜ.க கொண்டாடுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மோடியிடம் ஐந்து கேள்விகளை வைக்கின்றது.
நீங்கள் கூறிய அச்சே தின்னுக்கு என்னானது?
ஒவ்வொரு இந்தியர் கணக்கிலும் நீங்கள் தருவதாக கூறிய 15 லட்சம் எங்கே?
உணவு பொருட்களின் விலை ஏன் விண்ணைத் தாண்டிச் செல்கிறது?
பயங்கரவாதம் மற்றும் பேச்சுவார்த்தை கைகோர்த்துச் செல்ல முடியாது என்று நீங்கள் கூறியவற்றுக்கு என்னானது?
இந்திய மாணவர்கள் அவர்கள் புனேவில் இருந்தாலும், ஹைதராபாத்தில் இருந்தாலும் JNU வில் இருந்தாலும் அவர்கள் ஏன் துன்புறுத்தப் படுகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மனிஷ் திவாரி கூறுகையில் கடந்த 22 மாதங்களாக சமூக நல்லிணக்கம் சீர்கெட்டு கிடக்கிறது என்றும் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது என்றும் நாட்டின் பொருளாதாரம் கிழிந்து கந்தலாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

பாரத் மாதா விவகாரத்தில் உவைசியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பிய போது, உவைசியின் செயல்களுக்கு உவைசி தான் பதிலைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் பாரத் மாதா கி ஜே கோஷம் தேசியத்திற்கான லிட்மஸ் சோதனை அல்ல, அதனை கூறுபவர்கள் தேசபக்தர்களாகவும், அது தவிர வேறு எதனையும் கூறுபவர்கள் தேச விரோதிகளாகவும் சித்தரிக்க என்று பதிலளித்துள்ளார்.

இன்னும் இந்திய சுதந்திரத்தில் எந்த பங்களிப்பும் செய்யாத, பிரிட்டிஷாருக்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த ஒருவரை தங்கள் ஆசானாக ஏற்றுக் கொண்டுள்ளவர்கள் தேசியவாதம் குறித்த கேள்விகளை எழுப்புவது நகை முரணாக உள்ளது என்று கூறியுள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் 1947 க்கு பிறகும் கூட ஆர்.எஸ்.எஸ். இல் இருந்தோ, அல்லது ஜன சங் அல்லது பா.ஜ.கவிடமிருந்தோ தேசிய ஒருமைப்பாட்டிற்காக தியாகம் செய்த ஒருவரைக் கூட காண முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Comments are closed.