தடைகளை உடைத்தெறிந்து டாக்டர் ஆனார் ஹாதியா!

0

கேரளாவைச் சேர்ந்த அகிலா, சேலத்தில் கோமியோபதி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தபோது, சபீன் ஜஹான் என்ற இஸ்லாமியரை திருமணம் செய்துக்கொண்டார். அகிலா இஸ்லாம் மதத்திற்கு மாறி தனது பெயரை ஹாதியா என்றும் மாற்றிக்கொண்டார்.

இதனையடுத்து ஹாதியாவின் பெற்றோர், தனது மகளை மதம் மாற்றி கட்டாயத் திருமணம் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துந்தனர். இதற்கு ஹாதியாவின் கணவர் சபீன் ஜஹானும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் ஆஜரான ஹாதியா, “தனது விருப்பத்தால் தான் நான் மத மாறினேன்” என்றார்.

இந்த வழக்கு பரபரப்பாக நடந்து வந்தது. நாடு முழுவதும் கவனிக்கப்பட்ட வழக்காகவும் மாறியது. இறுதியில் ஹாதியாவுக்கு சாதகமாகதீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், தடைகளை தாண்டி ஹோமியோபதி படிப்பை முடித்தார் ஹாதியா. தற்போது மலப்புரத்தில் உள்ள ஒத்துகுங்கல் என்ற ஊரில் நேற்று கிளினிக் தொடங்கியுள்ளார். இதில் அந்த ஊரின் தலைவர் மற்றும் ஹாதியாவின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

Comments are closed.