தண்ணீர் பஞ்சம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

0

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து தமிழக நீர் மேலாண்மை துறையிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் வறட்சி நிலவி உள்ளது. மக்கள் அனைவரும் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் அகதிப்பட்டு வருகின்றனர். சென்னை போன்ற நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு மிகவும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

இதனையடுத்து, நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்யும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப பொதுப்பணித் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது

Comments are closed.