தனிமனிதனையும் சமூகத்தையும் எழுச்சியூட்டும் ஜகாத்

0

தனிமனிதனையும் சமூகத்தையும் எழுச்சியூட்டும் ஜகாத்

செலவளித்தல் என்பது மனிதனின் ஓர் உன்னதப் பண்பாகும். மனிதன் பிறந்தது முதற்கொண்டு தன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்து வாழ்வதன் மூலம் தனது இருப்பினை வெளிப்படுத்துகிறான். கொடுத்தும் பெற்றும் வாழ்வதன் மூலம் மனிதன் ஒருவரோடு ஒருவர் சார்ந்து சமூகப் பிராணியாவதற்கான அஸ்திவாரம் இடப்படுகின்றது.

உழைப்பு, திறமை, அறிவு, பொருளாதாரம் என கண்ணுக்குப் புலப்படுகின்ற, புலப்படாதவற்றை மனிதன் செலவு செய்கிறான். செலவளிப்பதன் மூலம் மனிதன் வாழ்க்கை சீராகச் செல்கிறது. குடும்பத்திற்கென, சுற்றத்தாரை பராமரிப்பதற்கென சமூக வாழ்வின் அடிப்படை அலகிலேயே செலவளிப்பதற்கு மனிதன் பழக்கப்படுத்தப் படுகிறான்.

மனிதர்கள் தம் வாழ்வில் பல்வேறு பொருளாதாரப் படிநிலைகளில் இருப்பதே வாழ்வொழுங்கின் எதார்த்தமாகும். இந்த எதார்த்தத்தினாலேயே வரலாற்றில் தாக்கம் செலுத்திய எல்லா மதங்களும் கோட்பாடுகளும் பல நல்ல மனிதர்களும் இயலாதோரை ஆதரிப்பது, ஏழைகளுக்கு உணவளிப்பது போன்ற அம்சங்களை வாழ்வின் உயர்ந்த அறமாகப் போதித்தனர். காலப் போக்கில் சமூகங்களில் அவை விழாக்களாகவும் சடங்குகளாகவும் அந்தந்த கலாசாரங்களில் இன்றளவும் நிகழ்வதை நாம் காணமுடியும். இதன் உச்சமாக பொருளாதார சமத்துவத்தை தமது உயர் சமூக இலக்காகக் கொண்டு ஓர் அரசாக அமைந்த பொதுவுடமை போன்ற கோட்பாடுகளையும் அண்மைய உலக வரலாற்றில் காண்கிறோம்.

இஸ்லாமிய மார்க்கம் பதினான்கரை நூற்றாண்டுகளுக்கு முன் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் பூரணத்துவம் மிகுந்த இறுதி இறைவழிகாட்டலாக மீண்டும் நிலைநிறுத்தப்பட்ட போது ‘‘செலவளித்தல்’’ என்பதை இன்னொரு பரிமாணத்துக்கு நகர்த்தி அதன் கருத்தை இன்னும் விசாலமாக்கியது.

இஸ்லாமிய மார்க்கம் நிலைநாட்டப்படும் ஐந்து அஸ்திவாரத் தூண்களில் ஒரு தூணாக ஜகாத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது.  இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில்தான் ஜகாத் முஸ்லிம்கள் மீது கடமையாக்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு முஸ்லிமும் தமது செல்வம் ‘‘நிஸாப்’’ எனும் குறிப்பிடத்தக்க அளவை அடைந்ததும் & தமது செல்வத்தில் ‘‘இரண்டரை விழுக்காடு’’ ஜகாத்தாகக் கொடுப்பதற்கு ஒதுக்கிவிடவேண்டும். (நிஸாப் என்பது பத்தரை பவுண் அளவு பெறுமதியான செல்வம்.)

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில்தான் ஜகாத் விதியாக்கப்பட்டது எனக் கூறினோம். அதாவது இஸ்லாமிய சமுதாயம் ஓர் அரசாக நிலைநிறுத்தப்பட்டதுடன் ஜகாத்தும் சட்டப்பூர்வமாக்கப்பட்டது எனக்கூற முடியும். எனினும் நாம் வரலாற்றில் இன்னும் கூர்ந்த அவதானத்திற்குச் செல்வோம். இஸ்லாம் ஓர் அரசு என்ற ஸ்தானத்துக்குச் செல்லும் முன்பே மக்கா காலப் பிரிவிலும் கூட ஜகாத் என்ற பெயரில் இல்லாவிட்டாலும் ஸதகா (பொதுவான தர்மம்), ஏழைகளுக்கு உணவளித்தல் போன்ற பல்வேறு வடிவங்களில் செலவளிப்பதைத் தூண்டியது.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.