தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்?

1

தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்?

கடைசியாக குடிநீரிலும் கைவைத்து விட்டார்கள். இனி, மாத பட்ஜெட்டில் குடிநீருக்கும் ஒரு தொகை ஒதுக்க வேண்டிய அவலநிலை தமிழக மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படலாம் எனப் பதறுகிறார்கள் சமூக அக்கறையாளர்கள்.

மக்களுக்கு குடிநீர் வழங்குவது தங்களின் அடிப்படை உரிமை என்பதனை ஆட்சியாளர்கள் மறந்து பல ஆண்டுகளாகிவிட்டன. தற்போது கோவை மாநகரத்தில் உள்ள ஏறத்தாழ 17 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவைக்கான உரிமத்தை, ஒரு தனியார் நிறுவனத்திடம் அளித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இன்று கோவை, நாளை தமிழகம் முழுவதும்.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு, 220 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன் 400 மில்லியன் யூரோ மதிப்பில் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை இந்தியாவின் மிகப்பெரிய குடிநீர் விநியோக ஒப்பந்தம் என்று தனது வலைதளத்தில் அந்த நிறுவனம்‘‘SUEZ wins a contract worth near 400 million euros to improve the water distribution service in Coimbatore’’ எனப் பீற்றிக்கொண்டிருக்கிறது. இனி எதிர்காலத்தில், கோவை மாநகர மக்கள் தங்கள் குடிநீர்த் தேவைக்கு இந்த தனியார் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி, அதன் தயவை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகலாம்.

பொலிவியா (Boliva) நாட்டில் கொச்சபம்மா (Cochabamba) நகரில் 1997ம் ஆண்டு அந்நாட்டு அரசு தன் மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை சிமாபா (SEMAPA) என்னும் அரசு கம்பெனிக்கு வழங்கியிருந்தது. பின் இதே சுயஸ் (SUEZ) என்னும் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது. கொடுக்கும் பணத்திற்கு ஏற்றார் போல் தண்ணீர் கொடுப்பார்கள். பணம் இல்லையா தண்ணீரும் கிடையாது. இந்நிலையில், அந்நாட்டு மக்கள் ஆற்று நீரை பயன்படுத்த துவங்கினார்கள். இதை பொருத்துக்கொள்ள முடியாத தனியார் நிறுவனம், ஆற்று வழிப்பாதையை அடைப்பதாகக் கூறி அங்கு தனியார் செக்யூரிட்டிகளை நிறுத்தி ஆற்றில் மக்கள் நீர் எடுப்பதை தடுத்தார்கள். சரி ஆற்றில் தான் தண்ணீர் எடுக்க முடியாது. தன் வீட்டு கிணற்றில், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினார்கள் மக்கள். அதையும் தடுத்து அதற்கும் கட்டணம் வசூலித்தார்கள். வெறுத்துப் போன மக்கள், சரி மழை நீரையாவது பயன்படுத்துவோம் என மழை நீரை சேமித்து பயன்படுத்த துவங்கினார்கள். ஆத்திரமடைந்த சூயஸ் நிறுவனம் அதற்கும் கட்டணம் வசூலித்தது. வெகுண் டெழுந்த மக்கள் ஒன்றினைந்து போராடி அந்நிறுவ னத்தை நாட்டை விட்டே அடித்து விரட்டினர், என பொலிவியா நாட்டைவிட்டு சுயஸ் நிறுவனம் விரட்டப்பட்ட நிகழ்வையும், அந்த நிறுவனத்தின் மிக மோசமான பின்னணியையும் இயற்கை ஆர்வலர்கள் விவரிக்கிறார்கள். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Discussion1 Comment

  1. ஏன் தமிழகத்தில் நிறுவனம் இல்லையா? பைப்புகளை மாற்றி அமைக்க ?