தன்னைத்தானே கல்லால் அடித்துக்கொண்டு போலிஸ் தாக்கியதாக பொய் கூறி மாட்டிக்கொண்ட பாஜக எம்.எல்.ஏ!

0

ஐதராபாத், கோஷமஹால் தொகுதி எம்.எல்.ஏ பா.ஜ.கவைச் சேர்ந்த ராஜா சிங் நேற்று இரவு அப்பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் அவந்தி பாய் லோத்தின் சிலை அமைந்திருக்கும் இடத்திற்குச் சென்றார். அங்குள்ள 6 அடி உயர அவந்தி பாயின் சிலையை தூக்கிவிட்டு புதிதாக 25 அடி உயரத்தில் வேறு சிலையை வைக்கப்போவதாகத் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ ராஜா சிங்கிடம் சிலை அமைப்பதற்கான அனுமதி இல்லாத போது, அவர் இவ்வாறு முயற்சி செய்வதால், அங்கிருந்த போலீசார் அவரை தடுத்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பாஜ-வினர் போலீசாருடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து தனது தலையில் பலமாக தாக்கிக்கொண்ட ராஜா சிங், போலீசார் தன்னைத் தாக்கியதாகக் கூறி அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்தார். மேலும் பா.ஜ.க-வினர் பலரின் மீது போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டு தாகியதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

ஆனால் இப்போது அதே சமுக வலைதளத்தில் ராஜா சிங் தன்னைத்தானே மண்டையை உடைத்துக்கொண்டு காவல்துறை மீது அவதூறு பரப்புவது வைரல் ஆகி வருகிறது.

Comments are closed.