தன்னை ஜானாதிபதி வேட்பாளராக அறிவிக்கவில்லை என்றால் மிககப்பெரிய கலவரம் வெடிக்கும்/; டொனால்ட் டிரம்ப்

0

அமெரிக்க ஜனாதபதி தேர்தல் நெருங்கி வரும் வேலையில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினருக்கான வேட்பாளர்களுக்கு கடும் போட்டி நிகழ்கிறது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தன்னை அதிபர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்றால் இங்கே கலவரம் வெடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ” நீங்கள் கலவரத்தை சந்திக்க வேண்டும் என்று நான் நினைகின்றேன், நீங்கள் கலவரத்தை சந்திக்க வேண்டும் என்று நான் நினைகின்றேன், நான் மிகப் பெரிய மில்லியன் கணக்கிலான மக்களின் பிரதிநிதியாக இருகின்றேன்” என்று கூறியுள்ளார்.

அவரின் இந்த கூற்றிற்கு பலம் சேர்க்கும் வகையில் டிரம்பின் ஆதரவாளர்களுள் ஒருவர் டிரம்ப் வேட்பாளராக அறிவிக்க படவில்லை என்றால் கண்டிப்பாக கலவரம் நடக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் “கலவரம் என்றால் நீங்கள் வன்முறை என்று பொருள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் வேட்பாளராக அறிவிக்க படவில்லை என்றால் பல லட்ச மக்கள் வருத்தத்திற்கு உள்ளாவார்கள் என்றும் அவர்கள் அதனை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் என்றும் அவர்களின் குரல் கேட்பட செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.”

இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் டிரம்ப் புதிய மையில் கல்லை நாட்டுளார் என்று கூற வேண்டும்

Comments are closed.