தன்பால் உறவு: தனி உரிமையா?? மனப்பிறழ்வா?

0

தன்பால் உறவு: தனி உரிமையா?? மனப்பிறழ்வா?

பின்நவீனத்துவ காலக்கட்டம் வினோதங்கள், முன்னெப்போதும் இல்லாத நேர் முரணான மற்றும் மாறுபட்டக்கருத்துகளின் காலமாகும். வரலாறு,-அறிவியல்,-அரசியல் விளக்கங்களில் மட்டுமல்ல, பாரம்பரியமாக நம்பி வரும் பண்பாட்டு விழுமியங்களிலும் தார்மீக கட்டுமானத்திலும் மறு விளக்கங்களை கோருகின்றன. இவை பாரம்பரிய மதங்களுக்கும் அவற்றின் நவீன கால இருப்புக்கும் சவால் விடுத்து பரிகாசம் செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த நூற்றாண்டின் பிந்தைய காலக்கட்டம் முதல் புரட்சிகரமான (?) விளக்கங்களுக்கும் சட்ட உருவாக்கங்களுக்கும் உதவும் விதமாக எல்.ஜி.பி.டி (லிநிஙிஜி)பிரபலமடைந்துள்ளது.

அங்கீகாரம் பெறும் பெயர்?

எல்.ஜி.பி.டி உரிமைகள் என்று பொருள் கொடுக்கப்பட்டு ஊடக- அறிவு ஜீவி வட்டாரங்களில் கிட்டத்தட்ட அங்கீகாரத்தையும் பெற்றுவிட்ட இந்த சொற் பிரயோகம் லிமீsதீவீணீஸீ நிணீஹ் ஙிஹ்sமீஜ்uணீறீ ஜிக்ஷீணீஸீsரீமீஸீபீமீக்ஷீ என்பதன் விரிவாக்கம். தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபடும் பெண் மற்றும் ஆண், இருபாலாரோடும் சேர்க்கையில் ஈடுபடுவோர், இயற்கையாகவோ, அறுவை சிகிட்சை மூலமோ மூன்றாம் பாலினத்தவராக மாறியவர்களோடு சேர்க்கையில் ஈடுபடுவோர் ஆகியோரை குறிப்பிடுவதாகும்.

1970களில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தன்பால் சேர்க்கையாளர்களின் ஒன்று கூடலும், போராட்ட அறிவிப்பும் வெளியானது. எனினும் 2001ல் நெதர்லாந்து தன்பால் சேர்க்கையாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி சட்டமியற்றியது. இன்று அமெரிக்கா, பிரிட்டன் முதலான இருபத்தி ஐந்து நாடுகள் தன்பால் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரமும், சட்ட ரீதியான பாதுகாப்பையும் வழங்கியுள்ளன. இந்தியாவில், இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவில் இயற்கைக்கு முரணான உறவிலிருந்து தன் பால் உறவு நீக்கப்பட்டு தன் பால் சேர்க்கையாளர்களின் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.