தபோல்கர் கொலைவழக்கில் தாவ்டே மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

0

ஹிந்து ஜனாக்ருதி சமிதி உறுப்பினர் விரேந்திர சிங் தாவ்டே மீது தபோல்கர் கொலை வழக்கில் சத்தித்திட்டம் தீட்டியது மற்றும் கொலை ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

தாவ்டே மீது இந்திய குற்றப் பிரிவு 120-B கிரிமினல் சதித்திட்டம் தீட்டுதல், 302 கொலை குற்றம் ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி பகுத்தரிவாதியான தபோல்கர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை 2014 மே மாதம் பாம்பே உயர்நீதி மன்றம் சி.பி.ஐ க்கு மாற்றி உத்தரவிட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. இவ்வருடம் ஜூன் மாதம் தாவ்டேவை கைது செய்தது. மேலும் சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்த சாரங் அகோல்கரையும் சி.பி.ஐ .தேடி வருகிறது. 2009 கோவா குண்டு வெடிப்பு தொடர்பாக இன்டர்போல் இவர் மீது சிவப்பு நோட்டிஸ் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தாவ்டே உறுப்பினராக இருக்கும் ஹிந்து ஜனாக்ருதி சமிதிக்கும் கோவிந்த் பன்சாரே வை கொலை செய்த சனாதன் சன்ஸ்தா அமைப்பிற்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.

Comments are closed.