தபோல்கர் கொலை வழக்கு:சாட்சியின் கூற்றை கண்டு கொள்ளாத காவல்துறை

0

பிரபல பகுத்தறிவுவாதிகள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் எம்.எம்.கல்பர்கீ ஆகியோர் வலதுசாரி இந்து அமைப்பினர்களால் கொலை செய்யப்பட்டு வந்த நிலையில், நரேந்திர தபோல்கரின் கொலை வழக்கில் மருத்துவர் விரேந்திர தாவ்டே என்பவர் மத்திய புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக நீதிமன்றம் முன் மத்திய புலனாய்வுத் துறையால் நிறுத்தப்பட்ட ஒருவர் மூன்று வருடங்களாக தான் காவல்துரையினர்களுக்கு குற்றவாளிகளைப் பற்றி தகவல் தந்ததாகவும் அதனை காவல்துறையினர் கண்டுகொள்ளவே இல்லை என்றும் கூறியுள்ளார்.

இவர் விரேந்திர தாவ்டேவுக்கும் சனாதன் சன்ஸ்தா அமைப்பிற்கும் உள்ள தொடர்பினை காவல்துறைக்கு தெரிவித்ததாகவும் தபோல்கரின் கொலையாளிகள் மற்றும் அவர்களது திட்டம் குறித்தும் பல காவலர்களுக்கு தெரியப்படுத்தியும் சி.பி.ஐ. இந்த வழக்கை தங்கள் கைகளில் எடுக்கும் வரை காவல்துறையினர் தான் அளித்த தகவலின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “விரேந்திர தாவ்டேவை எனக்கு 2001 இல் இருந்தே தெரியும். அவருடன் சேர்ந்து மிகப்பெரிய ஆனால் சரியாக ஒருங்கிணைக்கப்படாத குழுவில் இணைந்து இந்துத்வ கொள்கைக்காக நாங்கள் பணியாற்றிவந்தோம். முன்னதாக விஷ்வ ஹிந்து பரிசத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புடன் நான் பணியாற்றி வந்தேன். நான் தாவ்டேவை சந்திக்கும் போது அவர் முழுவதுமான சனாதன் சன்ஸ்தா அமைப்பின் உறுப்பினராக இருந்தார்.

சனாதன் சன்ஸ்தா அமைப்பில் நான் பணியாற்றி வந்த வேலையில் எனது வேகம் தாவ்டேவிற்கு பிடித்திருந்தது. பல சந்திப்புகளில் தாவ்டேவுடன் அவரது மனைவியும் கலந்துகொள்வார். ஆனால் 2008 க்கு பின்னால் அவரது வரத்து சிறிது சிறிதாக குறைந்தது. 2010இல் பஜ்ரங்தள் தலைவர்களுடன் எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிலிருந்து அவர்களுடன் நான் செயலாற்றுவதை நிறுத்திவிட்டேன்.

2013 இல் திடீரென நான் பணியாற்றும் கடைக்கு தாவ்டே வந்தார். மேலும் சனாதன் சன்ஸ்தா அமைப்பு எனக்கு ஒரு வேலையை கொடுத்திருக்கிறது என்றும் கூறினார். அவரை நான் மறுக்கவே, நான் வேறு எந்த ஒரு தலைவரையும் தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் நான் இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு பணியாற்றலாம் என்றும் தாவ்டே கூறினார்.

என்னிடம் துப்பாக்கிகளை செய்யுமாறும், இன்னும் இரண்டு பேரை தாயார் செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இரண்டு நபர்களுக்கு ஆளுக்கு 10 லட்சம் தருவதாக அவர் கூறினார். இன்னும் அவர்களுக்கு ஏதேனும் ஆகும் பட்சத்தில் அவர்களது குடும்பங்களை கவனித்துகொள்வோம் என்றும் அவர் கூறினார்.
இந்த சந்திப்புக்கு 10 நாட்கள் கழித்து தன்னிடம் இரு துப்பககிகளை ஒருவர் கொடுத்தார். எனது கடையில் வேறொரு நபர் இருந்ததால் என்னால் அவருடன் சரியாக பேச இயலவில்லை. இவ்வேளையில் எனக்கு தாவ்விடேன் செயலில் சந்தேகம் வரவே நான் என் காவல்துறை நண்பர் ஒருவரிடம் துப்பாக்கியுடன் வந்திருப்பவரை கைது செய்யுமாறு கூறினேன். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.”

இப்படி பல நேரங்களில் தாவ்டே அந்த நபரிடம் துப்பாக்கி தயார் செய்வது முதல் தெரியாத நபர்களுக்கு அடைக்கலம் தருவது வரை மர்மான பல உதவிகளை கேட்டுள்ளார். 2013 ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் தான் இவர்களின் திட்டம் தனக்கு தரிய வந்தது என்று அவர் கூறியுள்ளார். அதன் பின்னர் தனது காவல்துறை நண்பருடன் பேசி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தனக்கு சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி தருமாரு கேட்டதாகவும் பின்னர் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் மொஹிட்டே விடம் தான் நடந்தவற்றை எல்லாம் கூறியதாகவும் பின்னர் தன்னை ATS அதிகாரிகள் வந்து சத்திததாகவும் அவரிடமும் தான் அனைத்தையும் கூறி நீதிமன்றத்திலும் தான் வந்து சாட்சி கூற தாயார் என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வுகளுக்கு ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் கோவிந்த் பன்சாரே சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இறுதியாக இந்த வருடம் பிப்ரவரி 12 ஆம் தேதி தன்னை மத்திய புலானாய்வுத் துறை அதிகாரிகள் வந்து சந்தித்ததாகவும் அவர்களிடம் இந்தவழக்கிற்கு சாட்சியாக மாற தான் சம்மதிப்பதாக கூறியதாக கூறியுள்ளார்.

தன்னை துப்பாக்கியுடன் வந்து சந்தித்த நபர் சாரங் அகோல்கர் என்றும் அவர் 2009 கோவா குண்டு வெடிப்பிற்கு பிறகு தலைமறைவாகிவிட்டார் என்றும் அவர் கூறயுள்ளார். இவர் மலேகான் குண்டு வெடிப்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது எச்சரிக்கைகளை காவல்துறையினர் செவிமடுத்திருந்தால் இந்த கொலைகளை நடக்காமல் தடுத்திருக்கலாம் .

Comments are closed.