‘தப்லீக் ஜமாஅத்’தினர் மீது தாக்குதல் : ரயில் மறியல்; துப்பாக்கிச்சூடு!

0

உத்தரப்பிரதேசம்: மோடியின் ஆட்சியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது, குறிப்பாக ‘தப்லீக் ஜமாஅத்’தினர் குறிவைத்து தாக்கப்படுகின்றனர், ‘தப்லீக் ஜமாஅத்’தினர் தாக்கப்பட்டதை கண்டித்து நடந்த ‘ரயில் மறியல்’ போராட்டத்தில் ‘துப்பாக்கிச்சூடு’ நடத்தப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் ‘காந்தலா’ அருகில் ஓடும் ரயிலில் வெள்ளிக்கிழமை இரவு, தப்லீக் ஜமாஅத்தினர் தாக்கப்பட்டது தொடர்பாக ‘கிரானா’ சட்டமன்ற உறுப்பினர் நாஹித் ஹுசைன் தலைமையில் சென்ற குழுவினர் ‘காந்தலா’ ரயில் நிலைய அதிகாரியிடம் புகார் அளித்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட ரயில் நிலைய அதிகாரி, விடிவதற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார்.

சனிக்கிழமை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதோடு, நாங்கள் என்ன செய்யமுடியும் என்று கூறி, ரயில்வே அதிகாரிகள் கை விரித்து விட்டனர்.

இதையடுத்து, ரயில்களில் பயணிக்கும்போது ‘தப்லீக் ஜமாஅத்’தினர் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து, சட்டமன்ற உறுப்பினர் நாஹித் ஹுசைன் தலைமையில்,  (02-05-2015) மதியம் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் ‘பிரமோத் குமார் பாண்டே’ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ‘பிரஜ் பூஷன்’ ஆகியோர் மக்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், ஹிந்துத்துவ சிந்தனை கொண்ட சில காவல்துறை கயவர்கள், கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டனர்.

துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்து ‘ஷாம்லி’ மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், சிலரின் நிலை கவலைக்கிடமாகி விட்டதால் அவர்கள் ‘மீரட்’ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Comments are closed.