தமிழகத்தில் ஆணவ கொலைகள் அதிகரிப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

0

தமிழகத்தில் ஆணவ கொலைகள் அதிகரித்து வருவதாக நாளிதழில் வந்த செய்திகள் அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணி பிரசாத் அடங்கிய அமர்வு வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சமீபகாலமாக தமிழகத்தில் ஆணவ கொலைகள் அதிகரித்து வருவதாக தெரிவித்தனர். மேலும், ஆணவக்கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், கடந்த ஆண்டு ஆணவக் கொலை தொடர்பாக உச்ச நீதிமன்றம பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் இன்று விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Comments are closed.