தமிழகத்தில் இந்தியை திணிக்க பாஜகவுக்கு உரிமை இல்லை: மம்தா பானர்ஜி

0

புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது, அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி கொள்கை கட்டாயமாக்க வலியுறுத்தப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், உடனடியாக மத்திய அரசு பின் வாங்கியது.

மேலும் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் என்ற அம்சத்தை நீக்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில், 3வது மொழியை தேர்வு செய்யலாம் என்றும் குறிப்பிட்டது. இந்த விவகாரம் தமிழகத்தை போல் மேற்கு வங்கத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி, “இந்தியா மொழிவாரி மாநிலங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி இருக்கிறது. தமிழக மக்களை இந்தி படிக்க சொல்ல பாஜகவுக்கு உரிமை கிடையாது. அதனை பாஜக கட்டாயப்படுத்தவும் கூடாது” என்றார்.

Comments are closed.