தமிழகத்தில் உறுதியாக ஹைட்ரோகார்பன் திட்டம் அனுமதிக்கப்படாது: அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி

0

ஹைட்ரோ கார்பன் குறித்து 15.07.2019 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 7 இடங்கள் தமிழகத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு இடங்களுக்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் பதிலளித்தார். டெல்டா மாவட்ட மக்கள் பதட்டத்தில் இருப்பதால் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்பதை இக்கூட்டத்தொடரிலே தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று சட்டமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இக்கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சி.வி. சண்முகம், மத்திய அரசு ஏலம் விடுகிறது, அதன் அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கலாம். ஆனால் தமிழகத்தில் ஆய்வு, உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் தமிழக அரசின் அனுமதியை பெற வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் நடந்தது போல முதல்வருடன் ஆலோசித்து பாகங்களை ஆராய்ந்து திட்டத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நானும் ஜெயிலுக்கு போறேன், ஜெயிலுக்கு போறேன் என திமுகவினர் போராடுகின்றனர் என்றார். விவசாயிகளின் நலன் கருதி போராடுவதை கொச்சைப்படுத்தி பேசக்கூடாது என மு.க.ஸ்டாலின் பதிலிளித்தார்.

ஹைட்ரோகார்பன் திட்டம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். மாநில அரசை மீறி எந்த திட்டம் கொண்டுவர முடியாது என சட்டம் தெளிகாக சொல்கிறது. கொள்கை முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. அதனை மீறி திட்டம் கொண்டுவந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதி அளித்தார்.

Comments are closed.