தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறாத பாஜக: தமிழிசையின் தலைவர் பதவியை பறிக்க பாஜக முடிவு

0

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர்.

தமிழகத்தில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜக தலைமை 5 வேட்பாளர்களுக்கும் கடும் நெருக்கடியை கொடுத்து வந்தது. கட்சி தலைமையின் கடும் நெருக்கடியை தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களுடைய தொகுதிகளில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தை மேற்கொண்டனர். வேட்பாளர்கள் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் ‘தாமரை மலர்ந்தே தீரும்’ என்று கூறி வந்தனர். மேலும் மோடியும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்தும் தமிழகத்தில் பிரசாரத்தை மேற்கொண்டார்.

இந்நிலையில், தேசிய அளவில் பாஜ பெரும் வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற போதிலும் தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. இது பாஜக தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5ல் கண்டிப்பாக 3 இடங்களில் வெற்றி பெறுவோம் எனவும் தமிழிசை கட்சி தலைமையிடம் வாக்குறுதி அளித்திருந்தார். தமிழகத்தை பொறுத்தவரை வெளியாகிய தேர்தல் முடிவுகளில் பாஜக மண்ணை கவ்வியது. இதனால் பாஜக தலைவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், தமிழக பாஜக தலைவர் தமிழிசையை டெல்லிக்கு அக்கட்சி தலைமை அவசரமாக அழைத்துள்ளது. தோல்வி குறித்து தமிழிசையிடம் விளக்கம் கேட்கவும் உள்ளனர். தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசை சவுந்தரராஜனை விடுவிக்கவும் தலைமை முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.