தமிழகத்தில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறிவைக்கும் என்.ஐ.ஏ!

0

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர் சோதனை நடத்தி வரும் என்.ஐ.ஏ அதிகாரிகள், இஸ்லாமியர்கள் மீது தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் ஷாஜகான், முகமது உசேன், ‌ஷபியுல்லா ஆகியோர் மீது போத்தனூர் போலீசார் சட்ட விரோத செயல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் மூவரும் வருகிற 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கோவையை தொடர்ந்து மதுரையிலும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியுள்ளனர். மதுரை வில்லாபுரம் உள்ளிட்ட 3 பகுதிகளில் கொச்சியில் இருந்து வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சதகத்துல்லா என்பவரிடம் ரகசிய இடத்தில் நேற்று நள்ளிரவு முதல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையில் இஸ்லாமியர்களை பாதிக்கும் விதமாக அவர்களது வீடுகளில் நள்ளிரவில் புகுந்து சோதனை நடத்தி வருவதால், பாதிக்கப்படவர்கள் மாவட்ட கமிஷனரிடம் என்.ஐ.ஏ-வுக்கு எதிராக மனு அளித்தனர்.

Comments are closed.