தமிழகத்தில் 5 மாவட்ட வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்

0

தமிழகத்தில் 2வது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆனால் 46 வாக்குச்சாவடிகளில் பிரச்சனை ஏற்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகள், தேனியில் 2 வாக்குச்சாவடிகள், திருவள்ளூரில் 1 வாக்குச்சாவடி, கடலூரில் 1 வாக்குச்சாவடி மற்றும் ஈரோடில் 1 வாக்குச்சாவடி  என மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில், மே 19ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இதேபோல் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் வரும் 12ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Comments are closed.