தமிழகம் உட்பட பாஜக ஆட்சி இல்லாத மாநில ஆளுநர்களை சந்தித்த அமித் ஷா!

0

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. ஆனால் இதேபோல் மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, ஆந்திர ஆளுநர் நரசிம்மன், அருணாச்சல் பிரதேச ஆளுநர் பி.டி. மிஸ்ரா, ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரவுபதி முர்மு ஆகியோரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர்.

பாஜக ஆட்சி இல்லாத தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களை சேர்ந்த ஆளுநர்கள் ஒரே நாளில் உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.