தமிழக அரசு நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளியாகிய பொதுமக்களின் தகவல்கள்

0

தமிழக அரசின் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணையதளத்தில் பொதுமக்களின் தகவல்கள் மிக வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpds.gov.in/pages/reports/pds-report-taluk.xhtml தளத்தில் தமிழக வரைபடத்தில், மாவட்ட மற்றும் தாலுக்காவின் பெயர்கள் மற்றும் வரைபாடங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. அதில் கிளிக் செய்து உள்நுழையும் பட்சத்தில் தாலுக்கா வாரியாக அனைத்து மக்களின் குடும்ப அட்டைகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தகவல்களில் வட்டம்வாரியான கடைகளின் குறியீட்டு எண்கள், கடை பொறுப்பாளர்களின் பெயர்கள், பொருட்களின் விவரங்கள், பரிவர்த்தனைகள், பொருட்களின் இருப்பு நிலை, ஆகியவற்றுடன் புகார் தெரிவித்த பொதுமக்களின் விவரங்களும் அவர்களின் தொலைபேசி எண்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

இத்துடன் தாலுக்கா வட்டம் வாரியான தகவல்களில் குடும்ப விவரம் காண்க என்ற தலைப்பின் கீழ் குடும்ப அட்டை எண்ணுடன் முகவரியும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அஜாக்கிரதையான செயல் தனியுரிமை குறித்த அரசு பாராமுகமாக இருக்கின்றதா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது.

Comments are closed.