தமிழக பள்ளிகளில் வருகைப்பதிவு கருவியில் தமிழுக்கு பதிலாக இந்தி!

0

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்களின் வருகை பதிவை கண்காணிக்க விரல் ரேகை வருகை பதிவு (பயோமெட்ரிக்) முறையை ஜூன் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.  முன்னர் அந்த கருவியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இருந்து வந்ததது. ஆனால் தற்போது தமிழ் நீக்கப்பட்டு, இதற்கு பதிலாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி ஆசிரியர்கள், மீண்டும் அதில் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments are closed.