தமிழக பள்ளிகளில் வருகைப்பதிவு கருவியில் நீக்கப்பட்ட தமிழ் மீண்டும் சேர்ப்பு!

0

தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வருகைப்பதிவு (பயோமெட்ரிக்) கருவிக்கு மாற்றம் செய்யப்பட்டது . புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய பயோமெட்ரிக் கருவியில் ஆங்கிலத்துடன், தமிழ் மொழி இருந்து வந்தது. ஆனால் கடந்த வாரம் தமிழ் மொழியை நீக்கிவிட்டு இந்தி மொழியை சேர்த்துள்ளனர்.

http://www.puthiyavidial.com/தமிழக-பள்ளிகளில்-வருகைப்/

இதற்கு ஆசிரியர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பயோமெட்ரிக் கருவிகளில் இந்தி மொழி இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி (பயோமெட்ரிக்) கருவியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

Comments are closed.