தயிர், எண்ணெய்யில் ஊழல் புரியும் மத்திய ரயில்வே

0

சமீபத்திய தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் ஒன்றில் மத்திய ரயில்வே சந்தை விலையை விக பல மடங்கு உயர்வான விலைக்கு பொருட்களை வாங்கியது தெரியவதுள்ளது.

சமூக ஆர்வலர் அஜெய் போஸ் என்பவர் மத்திய ரயில்வேயின் கேடரிங் துறை மிக மோசமான நஷ்டத்தில் இயங்குவதை கேள்விப்பட்டு அது தொடர்பாக தகவல் அறியும் விண்ணப்பம் ஒன்றை பதிவு செய்தார். அதில் ஒரு கிலோ அமுல் தயிர் 9720 ரூபாய்க்கு பெறப்பட்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில்,”கடந்த ஜூலை 2016 ஆம் ஆண்டு இது தொடர்பாக நான் தகவல் அறியும் விண்ணப்பம் ஒன்றை பதிவு செய்தேன். ஆனால் அதற்கு மத்திய ரயில்வேயிடம் இருந்து பதில் வரவில்லை. அவர்கள் எதையோ மறைக்க நினைத்தது போன்று இருந்தது. பின்னர் மீண்டும் தகவல் கேட்டு விண்ணப்பிக்கவே நான் கேட்கும் தகவல்களை 15 நாட்களுக்கும் தருமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இருந்தும் இந்த பதிலை அவர்கள் பல மாதங்களாக தரவில்லை.” என்று கூறியுள்ளார்.

தனது விண்ணப்பத்திற்கு வேண்டுமென்றே ரயில்வே துறை பதிலளிக்கவில்லை என்பதை அறிந்த போஸ் மீண்டும் ஒன்று விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளார். இதில், அவருக்கு அதிர்ச்சியூட்டும் பதில்கள் கிடைத்துள்ளன. 25 ரூபாய் மதிப்பிலான 100 கிராம் தயிர் 972 ரூபாய்க்கு பெறப்பட்டது முதல் பல முறைகேடுகள் இதில் வெளியாகியுள்ளது. பல பொருட்களை இரயில்வே சந்தை விலையை விட பன்மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியது தெரியவந்துள்ளது.

இது போன்ற ஊழல்களினால் தான் ரயில்வே பெரும் நஷ்டத்தில் இயங்குகின்றது என்று போஸ் கூறியுள்ளார். தனது விண்ணப்பத்திற்கு பல மாதங்களாக தாமதப்படுத்தி பதில் அளித்த ரயில்வே முழு வருடத்திற்கான தகவல்களை நான் கேட்ட போதும் தங்களது பதிலில் சில மாதங்களுக்கான தகவல்களை மட்டுமே தந்துள்ளது என்று கூறியுள்ளார். அப்படி அவர்கள் அளித்த பதிலில், எலும்பில்லாத கோழி இறைச்சி, துவரம் பருப்பில் இருந்து டிஸ்யு பேப்பர் வரை அதிக விலை கொடுத்து பெறப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

ரயில்வேயின் பதிலில் 58 லிட்டர் எண்ணெய் 72, 034 ரூபாய்களுக்கு பெறப்பட்டுள்ளதாக குரிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லிட்டர், 1241 ரூபாய்க்கு பெறப்பட்டுள்ளது. 15 ரூபாய் மதிப்பிலான டாட்டா உப்பு 49 ரூபாய்க்கு பெறப்பட்டுள்ளது, தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் ஒரு பாட்டிலுக்கு 59 ரூபாய் கொடுத்து பெறப்பட்டுள்ளது.

போஸ் பெற்ற இந்த தகவல்களில் பொருட்களின் விநியோகத்திளும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. வெறும் 250 கிலோ மாவுகளை மட்டும் ரயில்வே வாங்கிய நிலையில் 450 கிலோ விநியோகம் செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. 20 கிலோ மைதா பெறப்பட்டுள்ள நிலையில் 35 கிலோ விநியோகம் செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. 255 கிலோ பாஸ்மதி அரிசி பெறப்பட்டுள்ள நிலையில், 745கிலோ விநியோகம் செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ரயில்வே காண்டீன்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று ரயில்வே கூறியிருக்க அது ஏன் என்ற உண்மையை இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல் உணர்த்துகிறது.

இது குறித்து மகத்திய ரயில்வேயின் டிவிஷனல் ரயில்வே மேலாளர் ரவீந்திர கோயல் கருத்து தெரிவிக்கையில், “இது டைப்பிங் பிழையாக இருக்கக் கூடும். ஆனாலும் அது குறித்து நான் விசாரிக்கின்றேன்.” என்று கூறியுள்ளார்.

இரயில்வேயில் பொருட்களை பெறுவது குறித்து, “இந்த பொருட்கள் அனைத்தையும் பெறுவதற்கு முறையான வழிமுறைகள் உள்ளது” என்றும் “பொருட்களுக்கான விலையை கொள்முதல் குழு நிர்ணயிக்கும்” என்றும் மத்திய ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் சுபோத் ஜெயின் கூறியுள்ளார்.

இது குறித்து ரயில்வே துறையில் பணியாற்றுபவர்கள், இது போன்ற ஊழல் முன்னரும் நடைபெற்றுள்ளது என்றும் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கில் நஷ்டக்கனக்கு காட்டப்படுகிறது என்றும் அதற்கு காரணம் இது போன்ற ஊழல்கள் தான் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மண்டல ரயில்வே பயனாளர்களின் ஆலோசனைக் குழு (ZRUCC) உறுப்பினர் சுபாஷ் குப்தா மற்றும் அதன் தலைவர் ரயில் பிரவாசி கருத்துத் தெரிவிக்கையில், “இது மிகப்பெரிய பிரச்சனை, இது உடனடியாக ரயிவே உயர் அதிகாரிகளால் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனை. பல பொருட்கள் அதிக விலைக்கு பெறப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் மற்றும் விநோயகத்தில் உள்ள வேறுபாடு வெறும் டைப்பிங் தவறு என்று எடுத்துக்கொள்ள முடியாது. இது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது, இதில் பாதிக்கப்படுபவர்கள் ரயில் பயணிகள் தான். இது போன்ற ஊழல்களினால் ரயில்வே நஷ்டத்தில் இயங்க ரயில் பயணச்சீட்டு விலைகள் உயர்த்தப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் குறைக்கப்படுகின்றது. இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளனர்.

Comments are closed.