தற்கொலைக்கு தூண்டினாரா அமித்ஷா?

0

பெருநிறுவன விவகாரங்களுக்கான டைரக்டர் ஜெனெரல் பி.கே.பன்சல் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ. யினால் விசாரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் தன் மகனுடன் தற்கொலை செய்து கொண்டார். மரணிக்கும் தருவாயில் ஒன்பது பக்க கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.

பன்சல் தனது கடிதத்தில் சி.பி.ஐ  சோதனையினால் தான் மிகுந்த அவமானத்திற்கு ஆளானதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது கடிதத்தின் நான்காம் பக்கத்தில், “டி.ஐ.ஜி.சஞ்சீவ் கவ்தம், இரண்டு பெண் அதிகாரிகள், ஒரு குண்டான ராணுவ வீரர் ஆகியோரை உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்போது அனைத்து உண்மைகளும் வெளிவரும். ஒருமுறை டி.ஐ.ஜி. என்னிடம், “நான் அமித் ஷாவின் ஆள். என்னை யாரால் தொட முடியும்? உன் மனைவி மற்றும் மகளை நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை கேட்டால் கேட்பவர் அச்சத்தில் நடுங்குவார்கள் என்று கூறினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சி.பி.ஐ தன்னையும் தன் குடும்பத்தினரையும் விசாரணை என்கிற பெயரில் சித்தரவதை செய்ததாகவும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள கட்டாயபப்டுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டெம்பர் 26 ஆம் தேதி, பி.கே.பன்சால் மற்றும் அவரின் மகனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட ஒரு நாளைக்கு முன்னர் இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.

மேலும் தனது கடிதத்தில், தனது மனைவி மற்றும் மகள் அதிகாரிகளால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் அவர்கள் ஜூலை மாதம் தற்கொலை செய்வதற்கு முன்னர் தங்களது உறவினர்களிடம் தாங்கள் சித்தரவதை செய்யப்பட்டது குறித்து தெரிவித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி தாக்கப்பட்டும் டி.ஐ.ஜி. சஞ்சீவ் கவ்தமால் தொலைபேசி மூலம் அசிங்கப்படுத்தப்பட்டும், மேலும் அவரிடம் சிறையில் உள்ள தன்னை சித்திரவதை செய்வதாக கூறியும் துன்புறுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இவ்வழக்கில் தான் குற்றவாளிகாவே இருந்தாலும் கூட தனது மனைவியும் மகளும் ஏன் சி.பி.ஐ. அதிகாரிகளால் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர் என்று தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பன்சாலின் மகன் தனது தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில், தங்களை துன்புருத்திய அதிகாரிளில் மற்றும் ஒருவர் பெயரை குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் பெருமளவில் மனரீதியாக மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் அதனால் தான் இந்த முடிவை எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். தனது கடிதத்தில் ஐந்து சி.பி.ஐ. அதிகாரிகள், தங்கள் அதிகாரத்திற்கு வெளியே தன்னையும், தனது தாய் மற்றும் தங்கையையும் சித்திரவதை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இன்னும் தனது தாய் மற்றும் தங்கை தற்கொலைக்கு எதிரானவர்கள், ஆனால் அவர்களை சித்திரவதை மூலம் தற்கொலைக்கு சி.பி.ஐ அதிகாரிகள் தள்ளிவிட்டனர் என்றும் இது தற்கொலை அல்ல மாறாக கொலை என்றும் தன் கடிதத்தில் கூறியுள்ளார். மேலும் தங்களின் இந்த நிலையை பார்த்து சி.பி.ஐ. அதிகாரிகளின் ஆதரவாளரான தங்களது அண்டை வீட்டார் ஒருவர் கேலி செய்து மகிழ்வுற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருநிருவன விவகார அமைச்சரவையில் கூடுதல் செயலாளர் தர அதிகாரியாக பணியாற்றியவர் பி.கே.பன்சல். இவர் முன்னணி மருத்துவ நிறுவனம் ஒன்றிடம் இருந்து லஞ்சம் பெற்றாக குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கபப்ட்டார். இது தொடர்பாக எட்டு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு பணம் கைப்பற்றியதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்கள் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து சி.பி.ஐ. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ இன் செய்தித் தொடர்பாளர் ஆ.கே.கவுர் இது குறித்து கூறுகையில், டில்லி காவல்துறையினரிடம் இருந்து தங்களுக்கு பன்சாலின் மரணம் குறித்த செய்தியும் அவரின் கடிதமும் கிடைத்ததாக கூறியுள்ளார்.

Comments are closed.