தலித் என்பதால் காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல்: பாஜக எம்.எல்.ஏ மகன் கைது

0

மத்திய பிரதேச மாநிலம், ஹர்தால் பகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவாக உள்ள கமல் பட்டேலின் மகன், சுதீப் படேல். காங்கிரஸ் தலைவர் சுக்ராம் பாம்னேவிற்கு 2 மாதங்களுக்கு முன்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கமல் படேலின் மனைவி வாங்கிய விவசாயக் கடனை மாநில அரசின் கீழ் தள்ளுபடி செய்தது குறித்து பாம்னே பேஸ்புக்கில் பதிவிட்டதால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் சுதீப். மேலும் பாம்னே தலித் என்பதால் அவரின் குடும்பம் குறித்து தொலைபேசியில் அவதூறாக பேசியும், கொலை செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.

இந்த கொலை மிரட்டலை, ஏப்ரல் 28ஆம் தேதி பாம்னே காவல்துறையில் புகார் அளித்தார். பிறகு கொலை மிரட்டல் தொடர்பில் பல்வேறு பிரிவுகளில் சுதீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்குப்பதிவாகி 2 மாதங்களுக்கு பிறகு சுதீப் படேல் நேற்று கைது செய்யப்பட்டதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தனது மகன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய்யப்பட்டதாக பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு நீதித்துறை நம்பிக்கை உள்ளதாகவும், தங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் எனவும் கமல் பட்டேல் கூறினார்.

Comments are closed.