தலித் எழுத்தாளர் வாகனம் மீது தாக்குதல்: கொலை முயற்சி புகார் பதிவு.

0

தலித் எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர் கன்சா இலையா வின் வாகனம் ஹைதராபாத் சென்று கொண்டிருந்த போது அந்த வாகனத்தை நான்கு நபர்கள் தாக்கியதாகவும் தன்னை அவர்கள் கொலை செய்ய முற்பட்டதாகவும் கடந்த சனிக்கிழமை காவல்துறையில் அவர் புகாரளித்துள்ளார்.

இலையா எழுதிய “சம்ஜிகா ஸ்மக்குளுறு கொமடோல்லு” என்ற புத்தகம் வியாச சமூக மக்களை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் பூபாலபல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹைதராபாத் சென்று கொண்டிருந்த எழுத்தாளரின் வாகனத்தை அச்சமூக மக்கள் வழிமறித்து அவர்  அவரது சர்ச்சைக்குரிய புத்தகத்திற்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று கோஷமிட்டுள்ளனர்.

சூழ்நிலையின் தீவிரத்தன்மையை புரிந்து கொண்ட இலையாவின் ஓட்டுனர் அவரது வாகனத்தை அருகில் உள்ள காவல் நிலையத்தை நோக்கி செலுத்தியுள்ளார். காவல்நிலையத்தில் புகாரளித்த இலையா தனது வாகனத்தை நான்கு நபர்கள் தாக்கி தன்னை கொலை செய்ய முற்பட்டதாக காவல் நிலையத்ஹ்டில் புகாரளித்துள்ளார்..

இந்நிலையில் இலையாவின் வாகனத்தை தொடர்ந்து சென்ற வியாச சமூக மக்கள் காவல்நிலையம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். நிலைமையை அறிந்த தலித் சமூக மக்களும் காவல்நிலையம் முன்பு திரண்டுள்ளனர்.

இரு சமூக மக்களையும் அப்பகுதி காவல் ஆய்வாளர் ஜான் நரசிம்ஹுழு சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார். ஆனால் மேலும் போராட்டம் தொடர எழுத்தாளர் காவல்துறை பாதுகாப்புடன் வாராங்கள் நகரதிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து தனது புத்தகத்தை காரணம் காட்டி தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் மீண்டும் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

Comments are closed.