தலித் – தாகூர் சமூகத்தினரிடையே மோதல். சஹாரன்புரில் மீண்டும் பதற்றம்

0

பாஜக ஆளும்  உத்திர பிரதேசம் சஹாரன்பூர் மாவட்டத்தில் தலித் மற்றும் தாகூர் சமூகத்தினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து மாநில காவல்துறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மகாரானா பிரதாப் பிறந்தநாள் தின ஊர்வலத்தை ஒட்டி இந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பினரிடையே நடைபெற்ற கல்லெறி சம்பவத்தில் மூன்று காவல்துறையினருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மோதல் காவல்துறை வாகனங்களுக்கும் காவல் நிலையத்திற்கும் தீவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக அம்பேத்கர் பிறந்த தினத்தை ஒட்டி தலித்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தாக்கூர் இனத்தவர்கள் ஊர்வலம் செல்ல முயர்ச்சித்ததினால் மோதல் ஏற்ப்பட்டது. (பார்க்க செய்தி). தற்போது அதே போன்று அந்த பகுதி வழியாக மகாரானா பிரதாப் பிறந்தநாளை ஒட்டி ஊர்வலம் மேற்கொள்ள தாக்கூர் இனத்தவர்கள் முயற்சிக்க மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் சஹாரன்பூர் மாவட்டம் ஷப்பிர்பூர் கிராமத்தில் தாகூர் இனத்தவர்கள் தலித் பகுதியில் நடத்திய ஊர்வலத்தில் அதிக சப்தத்துடன் ஒலிப்பெருக்கி வைப்பதை தலித் சமூகத்தினர் எதிர்த்தனர். அம்பேத்கர் ஊர்வலத்தை தலித் கிராமங்கள் வழியாக எடுத்துச் செல்வோம் என்று கூறும் இந்த தாகூர் இனத்தவர்கள் மூன்று மாதங்கள் முன்னதாக அவர்கள் பகுதியில் அம்பேத்கர் சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.